yarlathirady.com

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பான அறிவிப்பு.

[2025-10-30 11:56:28] Views:[12]

அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் தமக்கு வசதியான வங்கிக் கிளையொன்றில் சமர்ப்பித்து, 'அஸ்வெசும' பயனாளி வங்கிக் கணக்கொன்றை திறக்க வேண்டும் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத,'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்ற பயனாளிகள், விரைவில் இந்த வங்கிக் கணக்குகளைத் திறந்து, குறித்த வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என அந்த அறிவித்தல் மூலம் பயனாளிகளுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.