யாழ்ப்பாணத்தில் பெரும் திருட்டில் ஈடுபட்ட மூவர்: போதைப் பொருளுடன் கைது.!!!
[2025-10-29 12:51:32] Views:[11]
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வியாபார நிலையத்தில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குறித்த சந்தேகநபர் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










