yarlathirady.com

ஆபத்தான போதை பொருளுடன் இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

[2025-10-28 12:07:43] Views:[9]

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான கனேடிய பிரஜை என தெரியவந்துள்ளது.

அவர் இன்று காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரின் பயணப்பொதியில் 6 பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் 253 கிராம் எடையுள்ள 72 சிறிய ஹஷிஷ் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவர் கொண்டுவந்த போதை பொருட்களும் மேலதிக விசாரணைக்காக விமான நிலையப் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.