இந்தோனேசியாவிற்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பான தகவல்..!!
[2025-10-27 12:08:59] Views:[15]
இந்தோனேசியாவிற்கு அருகே உள்ள திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
எனினும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










