யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி தொடர்பான செய்தி.
[2025-10-27 12:06:26] Views:[10]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக குழு தகவல வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் இம்மாதம் 15ம் திகதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவுபெற்றது.
இந்த கால அவகாசத்துக்குள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்காக வியண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










