yarlathirady.com

-தாய்லாந்து புறப்பட்ட மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட ஆணி.

[2025-10-26 19:40:02] Views:[32]

சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் நேற்று வெள்ளிக்கிழமை தாய்லாந்துக்கு பயணித்துள்ளனர்.

தாய்லாந்தில் ஒக்டோபர் 24 முதல் 27 வரை இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் கொண்டமைந்த சர்வதேச கூடைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி அணியும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளன.

இதனடிப்படையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி அணியினர் தாய்லாந்துக்கு வெள்ளிக்கிழமை இரவு விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.