காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பான அறிவித்தல்..!
[2025-10-20 20:53:13] Views:[11]
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் 29ஆம் திகதியில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு, கப்பல் திருத்த பணிகளுக்காக எமது கப்பல் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தவுள்ளோம். பின்னர் நவம்பர் முன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவையை வழமைபோல மேட்கொள்ளவுள்ளோம்.
தற்போது நாங்கள் இருவழி பயணத்திற்கு 28ஆயிரத்து முந்நூறு ரூபாவை அறவிடுகின்றோம். இலங்கையில் இருந்து செல்வதற்கு 12ஆயிரத்து முந்நூறு ரூபாவும், இந்தியாவில் இருந்து வருவதற்கு 16 ஆயிரம் ரூபாவும் அறவிடுகின்றோம் என அவர்க் மேலும் தெரிவித்துள்ளார்.










