ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய சலுகைகள்: அரசின் மகிழ்ச்சி தகவல்.
[2025-10-11 14:47:34] Views:[11]
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வூதிய திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாங்கள் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை சந்திக்கிறோம். பிரதி அமைச்சர், செயலாளர், பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சனைக தொடர்பாக கலந்துரையாடுகிறோம்.
நாங்கள் இன்னும் அடையாளம் காண முடியாத பிரச்சினைகள் இருக்கலாம். இருப்பினும், ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற தயாராகா இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.










