சற்று முன்னர் பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்.
[2025-10-10 14:41:34] Views:[12]
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
முன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவியேற்ற புதிய அமைச்சர்கள்.
1. பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்.
2.அனுர கருணாதிலக - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.
3. வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க - வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்.
பதவியேற்ற புதிய பிரதி அமைச்சர்கள்.
1. அனில் ஜயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்.
2. டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்.
3. எம்.எம். மொஹமட் முனீர் - சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்.
4. எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்.
5. முதித ஹங்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்.
6. அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்.
7. எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்.
8. யு.டி. நிஷாந்த ஜெயவீர பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்.
9. கௌசல்யா அரியரத்ன வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்.
10.ஈ.எம். ஐ. எம். அர்காம் எரிசக்தி பிரதி அமைச்சர்.










