யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்: ஆபத்தான வாள்களும் மீட்பு..!!
[2025-10-08 11:29:41] Views:[12]
யாழ் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் 24 வயதான குறித்த சந்தேக நபரை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.










