கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை
[2025-10-04 12:29:07] Views:[9]
மட்டக்களப்பு - கல்லடி நாகதம்பிரான் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.
அங்கு இயங்கிவந்த வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பை மீட்டனர்.










