யானை தாக்கி ஒருவர் பரிதாபப் பலி
[2025-10-03 09:51:21] Views:[10]
நேற்று(2) காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
புத்தளம், ஆனமடு, சியம்பலாகஸ்வெவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 65 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இன்று காலை 6.30 மணியளவில் தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.










