மன்னாரில் போராட்டம்; காற்றாலை வேண்டும்
[2025-10-03 09:39:26] Views:[11]
மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நேற்றைய தினம் மன்னாரில் காற்றாலை திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் ஒன்றினைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பொதுமக்களுக்கு காற்றாலை தொடர்பில் உரிய தெளிவு படுத்தலை வழங்கி, இந்தத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










