பேருந்து-லொறி மோதி விபத்து
[2025-10-01 12:36:49] Views:[10]
மிஹிந்தலை அருகே பலுகஸ்வெவ பகுதியில் ஏ-9 வீதியில் தனியார் பேரூந்து ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் லொறியொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும்....
விபத்தின் காரணமாக பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










