நெடுந்தீவு கடற்பரப்பினுள் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
[2025-09-28 11:52:47] Views:[11]
நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்று (27)அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது










