யாழில் கோர விபத்து: பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலி
[2025-09-21 19:38:00] Views:[9]
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் குறித்த பெண்ணும் அவரது உறவு முறையான இளைஞர் ஒருவரும் மோட்டார் சைகிளில் கச்சாய் வீதி ஊடாக கொடிகாமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர்
அதே திசையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் கெற்பேலி மேற்கு மிருசுவிலைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். மற்றும் அதேவேளை உறவு முறை இளைஞரான 22 வயதுடைய நபர் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,
அங்கிருந்து மேலதிக சிகைச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










