யாழ் குருநகர் பகுதியில் ஆபத்தான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
[2025-09-19 21:23:07] Views:[11]
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது 120 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.










