இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!
[2025-09-18 19:14:49] Views:[10]
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் .
இதன் பொது 7 மீனவர்களது விளக்கமறியலை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.










