yarlathirady.com

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்..!

[2025-09-18 16:00:23] Views:[15]

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளையதினம் சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.

மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ‘கிட்சூன்’ செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

அதன்படி, BIRDS-X டிராகன்ஃபிளை சிறிய செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என தெரிவிக்கப்படுகின்றது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.