கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தில் தடை...!
[2025-09-16 22:35:15] Views:[10]
எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை மறுதினம் முற்பகல் 10.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரையில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும். அதேநேரம் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்.










