2000 ரூபா நாணயத்தாள் தொடர்பாக மத்திய வங்கியின் அறிவிப்பு..!
[2025-09-15 14:46:28] Views:[13]
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025.08.29 அன்று 2000 ரூபா ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது.
புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன.
இச்செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக சுற்றோட்டத்திற்கு விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்த விபரங்களை அறிந்துகொள்ள, நாயணத்திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கோ அல்லது மத்திய வங்கியின் சமூக ஊடகத்தளங்களை பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.










