yarlathirady.com

கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலை பணிகள் மீள ஆரம்பம்

[2025-09-14 19:03:25] Views:[14]

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடவத்தை - மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதனுடன், கடவத்தை இன்டர்சேஞ்ச் ஹப் மற்றும் கடவத்தையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 500 மீற்றர் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கட்டுமானப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் சுமார் ரூ. 8.6 பில்லியனை ஒதுக்கியுள்ளது.

இதேவேளை சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து பெறப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுடன் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனதெரிவித்துள்ளார்.

37 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகளை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.