yarlathirady.com

6 அரிய வகை உயிரினங்களுடன் இலங்கை வந்த பெண்: கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது..!

[2025-09-12 19:39:46] Views:[14]

உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர்.

40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பெங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவுடன் சேர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.

புள்ளிகள் கொண்ட ராஜ் நாகம்(1), மஞ்சள் அனகோண்டா(1), ஹோண்டுரான் பால் பாம்புகள்(3), உருளை மலைப்பாம்பு(1) என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பாம்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள உயிரினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.