yarlathirady.com

பொலிஸ் திணைக்களத்தின் கட்டணங்கள் தொடர்பான விசேட அறிவிப்பு...!

[2025-09-12 14:32:51] Views:[19]

இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டண விபரங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடு பயணம் செய்யும் ஒருவருக்கு நிகழ்நிலையில் பொலிஸ் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு 5000 ரூபாய் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மேற்கொள்வதற்காக ஆறு மணித்தியாலங்களுக்கு 500 ரூபாவும், ஆறு முதல் 12 மணித்தியாலங்களுக்கு 1000 ரூபாவும், 12 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட நேரத்திற்கு 2000 ரூபாவும் அறவீடு செய்யப்பட உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொலிஸ் அறிக்கைகளுக்காக 500 ரூபா அறவீடு செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு தேவைகளுக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்படும் பொலிஸ் அறிக்கைக்காக 300 ரூபா அளவீடு செய்யப்பட உள்ளது.

முறைப்பாடு ஒன்றின் நகல் பிரதியை பெற்றுக் கொள்வதற்கு ஒரு பிரதிக்கு தலா ஐம்பது ரூபாய் அறவீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்படும் போது உரிய பற்றுச்சீட்டுகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.