வங்கிக் கணக்கில் வைப்பிடப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு..!!
[2025-09-10 22:08:03] Views:[11]
செப்டெம்பர் மாதத்துக்கான நலன்புரி உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
11,201,647,000.00 ரூபாய் 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களது சேமிப்புக் கணக்குகளில் வைக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 12ஆம் திகதி முதல் பயனாளிகள் நலன்புரி உதவித் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.










