யாழில் ஆபத்தான போதைப்பொருளுடன் நால்வர் கைது..!
[2025-09-10 14:55:59] Views:[11]
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 110 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட நால்வரும் 18,21,22 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










