yarlathirady.com

போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

[2025-09-02 14:38:37] Views:[11]

குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக தெரிவிக்கும் மோசடி வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.

மோசடி செய்பவர்கள், போலியான விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பொது மக்களை குறிவைப்பது அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையை கோருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மோசடி வலையில் விழுந்தவுடன் குறித்த பணத்தை இழக்க நேரிடும்.

இதற்கிடையில், இதுபோன்ற மோசடிகளை அடையாளம் காண்பது மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது குறித்து மக்களுக்குக் தெரிவிப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு சமூக ஊடக தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.