யாழில் ஒரே நேரத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம்..!
[2025-08-28 21:09:08] Views:[12]
யாழ்ப்பாணத்தில் 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின், நிதியுதவியில் குறித்த திருமண நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாலி, கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு, 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 தம்பதியினரையும், யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










