இலங்கையில் கோரா விபத்து: ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபரீதம்...!!
[2025-08-27 18:52:34] Views:[10]
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து சம்பவைத்துள்ளது.
கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதிலேயே இந்த பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது.
மேட்படி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.










