yarlathirady.com

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள கொண்டுவரப்படவுள்ள புதிய வசதி.

[2025-08-27 15:32:24] Views:[13]

சாரதி அனுமதிபத்திரத்தை பெறுவதற்கு தேவையான மருத்துவச் சான்றிதழை ஒன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் அச்சிடப்பட்ட நகல் வடிவில் மருத்துவச் சான்றிதழை வழங்கும் செயற்பாட்டில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பதிரம் காலாவதியாகும் போது, ​​அதைப் புதுப்பிக்க வேரஹெராவுக்கு செல்ல வேண்டும். இது மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. கைரேகை தேவைப்படுவதால் மட்டுமே வேரஹெராவுக்கு செல்வது கட்டாயமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள நடைமுறையை ஒரு மாதத்திற்குள் மாற்றி, சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வேரஹெராவுக்கு செல்லாமல் எளிதாக செய்யக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கவுள்ளதாக அவர் கூறினார்.

ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்குள் வேரஹெரவிற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பிக்கும் முறை முறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.