yarlathirady.com

விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய நடிகர் சங்கம்!

[2025-08-26 21:19:43] Views:[37]

நேற்றயதினம் காலஞ்சென்ற தென்னிந்திய சினிமா நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை உலகம் முழுவதும்அவர்களது ரசிகர்கள் ஒரே நெகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைவுகூரப்பட்டது.

விஜயகாந்த் தமிழ் திரையுலகின் முன்னாள் முன்னணி ஹீரோவாகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், மேலும் அரசியல்வாதியாகவும் தனக்கென ஒரு சிறப்பை பெற்றவராவர்.

அவரது 73வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, சங்க நிர்வாகிகள் மற்றும் சில முக்கிய நடிகர்கள் மலர் செலுத்தி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

விஜயகாந்த் தனது திரைப்பட பயணத்தின் உச்சத்தில் இருந்த போதே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சமூக நலனுக்காகவும், நடிகர்களுக்கான நலத்திட்டங்களுக்காகவும் பங்களித்தவர். அத்தகைய நடிகரின் பிறந்தநாளை இன்று திரையுலக பிரபலங்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.