yarlathirady.com

110 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை..!

[2025-08-26 19:14:23] Views:[33]

இந்தியா இராமநாதபுரம் மாவட்டத்தில் காணப்படும் 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பன் பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1914 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவு நிலப்பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீற்றர் தொலைவுக்கு கடலில் ரயில் பயணிப்பதட்காக மேம்பாலமாக பாம்பன் பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலமானது கடல் பகுதியை கடந்து செல்லும் பெரிய படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்காக இரு பிரிவாக பிரிந்து தூக்கி பின் தண்டவாள நிலையில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்த பாலமானது சேதம் அடைந்ததையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் அருகே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் லிப்ட் வகை தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி இந்த புதிய தூக்கு பாலத்தை திறந்துவைத்தார். தற்போது அதில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பழைய தூக்கு ரயில் பாலத்தை அகற்றுவதற்கு இந்திய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி 4 மாதங்களில் பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.