yarlathirady.com

மான் வேட்டையில் ஈடுபட்ட ஐவர் கைது.!

[2025-08-26 10:33:11] Views:[18]

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலகுடாவெவ மற்றும் மொரவெவ பகுதிகளைச் சேர்ந்த 40 வயதுக்கும் 50வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் துப்பாக்கி பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக மொரவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது

தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை பொலிஸார் சோதனை இட்டபோது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததுடன் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் மீட்டனர்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியுடன் மேலும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.