ஹோட்டல் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு.!
[2025-08-26 10:00:55] Views:[9]
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவகம் ஒன்றின் உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (25) இரவு மாத்தறை கடற்கரை வீதிப் பகுதியில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர் துப்பாக்கிதாரியுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் சந்தேக நபர் அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று, நான்கு தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம், சந்தேக நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்










