பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை அதிரடியாக கைது செய்த CID..!
[2025-08-25 11:31:51] Views:[10]
கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் என்றும், தனது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு சந்தேநபரான பிரதி பொலிஸ் மா அதிபர் தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபரை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.










