கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது!
[2025-08-22 12:15:26] Views:[10]
புளியம்பொக்கனை துவரை ஆறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிந்து 110 லீட்டர் கசிப்பும், 524 லீட்டர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.










