பெண்ணொருவரிடமிருந்து பல கோடிகளை மோசடி செய்த மூவர் கைது.!
[2025-08-21 10:12:55] Views:[9]
அதிர்ஷ்ட இலாப சீட்டிலிருந்து பெண் ஒருவர் வெற்றிபெற்ற பணத்தில் 96,298,759.58 ரூபாய் மோசடியாகப் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் லொத்தர் விற்பனை பிரதிநிதி ஒருவர் மற்றும் பெண்ணொருவரும் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஹபுதலயாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 18 அன்று அதிர்ஷ்ட இலாப சீட்டொன்றை வாங்கி வெற்றி பெற்றிருந்தார்.
இதனையடுத்து, குறித்த சீட்டை விற்பனை செய்த விற்பனை பிரதிநிதி ஏனைய இரண்டு சந்தேக நபர்களுடன் இணைந்து அந்தத் தொகையை மோசடியாகப் பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகளின் நீண்ட விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










