தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு!
[2025-08-20 12:11:29] Views:[10]
மஹாவ பகுதியில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது மஹாவ நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான மகளும் 53 வயதுடைய அவரது தாயார் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.










