yarlathirady.com

கடையடைப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த வர்த்தகர்கள்

[2025-08-18 05:50:58] Views:[19]

தமிழரசுக்கட்சியினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பிற்கு யாழ்ப்பாணவர்த்தகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.


குறித்த கடையடைப்பிற்கு ஆதரவினை கோரும் வகையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.


இதன்போது திங்கட்கிழமை (18) வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பிற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் வர்த்தகர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சில விடயங்களை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பியதாகவும் கடையடைப்பு என்ற விடயத்தை நீங்கள் அறிவித்துள்ளீர்கள் ஆனால் இதில் முழுக்க முழுக்க சம்மந்தப்பட்டிருப்பது வர்த்தக சங்கம் தான் எனவே வர்த்தக சங்கங்களுடன் கதைத்து முடிவெடுத்த பிறகு அறிவித்திருக்க வேண்டும் நீங்கள் முடிவெடுத்து விட்டு அறிவிக்க முடியாது என குறிப்பிட்டதாகவும் இந்த பருவத்தில் கடைகளை பூட்டினால் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.