நீதி கோரி புங்குடுதீவில் போராட்டம்
[2025-08-16 13:29:13] Views:[13]
நேற்று (15) யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடந்த 10 ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்டவரிற்கு நீதிகோரி பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசாவின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரி புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மக்கள் இணைந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மண்டை தீவு மற்றும் மடத்துவெளி பகுதியில் இருந்த பாதுகாப்புப் படையினரின் சோதனைச்சாவடிகள் அப்புறப்படுத்தப்பட்டதன் பின்னர் தீவுப்பகுதியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் மீண்டும் சோதனைச்சாவடிகள் அவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டுமெனவும், புங்குடுதீவு பகுதியை உள்ளடக்கியதாக புதிய பொலிஸ் காவல் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டதாக தெரிய வருகிறது.










