கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து சேவை..!
[2025-08-14 09:40:35] Views:[13]
கிளீன் சிறிலங்கா/சுத்தமான இலங்கை திட்டம் என்ற தொனிப்பொருளில் நேற்று கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் மக்களிடையே சுத்தமான இலங்கை திட்டத்தை ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தை 'கிளீன் சிறிலங்கா' செயலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
கல்கிஸ்ஸயிலிருந்து புறப்பட்ட தொடருந்து நேற்று காலை 6:20 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைந்து, காலை 6:40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டது.
சுற்றுச்சூழல், சமூக மற்றும் நெறிமுறை மாற்றம் மற்றும் தேசிய அளவிலான உறுதிமொழிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.










