yarlathirady.com

மீண்டும் தீவிரமடைந்து வரும் ஆபத்தான நோய்: சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

[2025-08-12 19:14:26] Views:[17]

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரால் பரவுவதாகவும், தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை காலத்தில் சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக வயல் நிலங்களுக்கு செல்வதால் இந்நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் ஐந்து அல்லது ஆறு நாட்கள் நீடித்தால், அது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டும் எனவும், கண்களில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம், வயிற்று வலி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும் அவர் விளக்கினார்.

எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை இருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், இந்நோய் சிறுநீரகத் தொற்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் சேற்று நீர் மற்றும் மாசடைந்த பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.