yarlathirady.com

புதிய வாகனங்களை பதிவு செய்வோருக்கு வெளியான முக்கிய கட்டண விபரம்..!

[2025-08-09 14:34:18] Views:[33]

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான கட்டணங்கள் தொடர்பில் இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, 1 முதல் 999 வரை உள்ள எண்ணைப் பெற, ஒரு இலட்சம் ரூபாய், 1000 முதல் 1999 வரையிலான எண்ணைப் பெற, இரண்டு இலட்சம் ரூபாய், 2000 முதல் 2999 வரையிலான எண்ணைப் பெற, மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

அதேவேளை, 3000 முதல் 3999 வரையிலான எண்ணைப் பெற, நான்கு இலட்சம் ரூபாய் மற்றும் 4000 முதல் 4999 வரையிலான எண்ணைப் பெற, ஐந்து இலட்சம் ரூபாய் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு செலுத்தப்பட வேண்டும்.

மேலும் 5000 முதல் 9999 வரை விருப்பமான எண்ணைப் பெற கொள்வனவாளர்கள் பத்து இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீதமுள்ள எண்கள், பத்து இலட்சம் செலுத்தி பெற வேண்டிய சூப்பர் எண் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கமைய வாகன இறக்குமதி அதிகரித்து வருவதால், பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான தேவை அதிகமாக இருப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.