பாலத்தில் முந்தி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனம் பாலத்தில் மோதி விபத்து.!
[2025-08-07 11:48:16] Views:[11]
பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் கண்டாவளை வெளிக்கண்டல் சந்தியில் பாலத்தில் பயணித்த இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாலம் சேதமடைந்துள்ளது.
நேற்று (06) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் பாலத்துடன் மோதியதில் டிப்பர் வாகனமும் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.










