இலங்கையில் புதிதாக திருமணம் செய்ய உள்ளோருக்கு வீடு வழங்கும் திட்டம்.
[2025-08-05 14:45:22] Views:[11]
இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு அரசாங்கத்தால் வீடு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் தங்கள் சொந்த வீட்டில் வாழ விரும்பும் இளம் தலைமுறையினரின் கனவை இந்த திட்டம் நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள வீட்டுவசதி பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய வீடுகளைக் கட்ட அரச ஊழியர்களுக்கு கடன் வழங்கும் திட்டமும் அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.










