வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் விரைவில்.
[2025-08-04 19:50:09] Views:[15]
வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை அதிகாரிகள் இன்று நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
கள ஆய்வை வேலணை பிரதேச சபையின் தவிசாளர், வேலணை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருடன் வேலணை பிரதேச செயலக அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், காணி அதிகாரி மற்றும் துறைசார் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்
மேட்குறிப்பிட்ட மைதானத்தை அமைப்பதற்காக 4 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்படவுள்ளதுடன் குறித்த மைதான வளாகத்திற்குள் நவீன வசதிகளுடன் விளையாட்டு துறைசார் கட்டுமாணங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.










