யாழ்ப்பாணம் வந்த பிரதமர் ஹரிணி: புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்..!!
[2025-08-02 21:42:53] Views:[15]
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ் - கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரங்சன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலர் கலந்துகொண்டனர்.










