கேகாலை – அவிசாவளை வீதியில் பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் காயம்.!
[2025-08-02 12:04:51] Views:[10]
கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (02) காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.










