சீனாவில் கடும் புயல் காரணமாக இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!
[2025-08-01 19:13:04] Views:[14]
சீனாவின் ஷங்காயில்,'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரம் முழுதும் 1,900க்கும் மேற்பட்ட தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங் உட்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஷங்காயின் இரண்டு சர்வதேச விமான நிலையங்களில், 640 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.










