அதிகாலை துப்பாக்கிச் சூடு! தூங்கிக் கொண்டிருந்த இளைஞன் பலி!!
[2025-07-31 13:07:45] Views:[10]
களுத்துறை, கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது சூடு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் தப்பியோடியுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.










